இத்திருக்கோயிலில் மதியம் உச்சிகால பூஜை முடிவடைந்ததும் பகல் 12 மணிக்கு திருக்கோயிலுக்கு வெளியே சத்தியமங்கலம் சாலையில் கருணை இல்லம் அருகில் உள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் திட்டம் 23.02.2002 முதல்துவங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளதாலும், கர்நாடகா மாநிலமக்கள் அதிகளவில் வருகைபுரிவதாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவதாலும், திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு 400 நபர்களுக்கும், செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய 4 நாட்களுக்கு 200 நபர்களுக்கும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் 1000 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.200 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ஆகும் செலவுத்தொகை ரூ.7,000 ஆகும். அன்னதான உண்டியல்வரவு, அன்னதான முதலீடுவட்டிவரவு மற்றும் அன்னதான நன்கொடைவரவு மூலம் அன்னதானத் திட்டம் செயல்பட்டுவருகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தாங்கள் விரும்பும் தொகையினை நன்கொடையாக வழங்கி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அன்னதானத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச்சட்டம் 80-ன் கீழ் வருமானவரி விலக்கு உண்டு.